Breaking News
recent

சாவகச்சேரி தற்கொலை அங்கி மீட்பு இருவருக்கு விடுதலை

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐவரில் இருவர், இன்றைய தினம் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி அருண ஆட்டிக்கல முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இருவரையும் விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டிருக்கின்றார்.

பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு ள்ள தமிழ் அரசியல் கைதிகள் 21 பேரின் வழக்குகள் இன்றைய தினம் கொழும்பு பிரதம நீத வான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இவர்களில் சாவகச்சேரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐவர் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிரான வழக்கு விசாரணையும் இன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த வழக்கு விசாரணையில் பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி, ஏனைய நால்வரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள கைதியொருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் அடங்கியிருந்ததாக அவர்கள் சார்பில் முன்னிலையான சட்ட த்தரணி நிரஞ்சன் தெரிவித்தார்.

இதேவேளை எஞ்சிய 15 அரசியல் கைதிகளையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதிபதி அருண ஆட்டிக்கல உத்தரவிட்டு ள்ளார்.

பயங்கரவாதத்தை மீள உருவாக்க ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட ஏனைய பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாணக்கியன்

சாணக்கியன்

No comments:

Post a Comment

Powered by Blogger.