Breaking News
recent

கடத்தியதாக நாடகமாடிய வர்த்தகருக்கு விளக்கமறியல்!

திருகோணமலையில் வைத்து காணாமற்போனதாக கூறப்பட்ட  பண்டாரகமவைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் எம்.எச்.நஸ்ரினை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

களுத்தறை அட்டுலுகம பகுதியிலிருந்து திருகோணமலை இலங்கை வங்கிக்கு ஏல விற்பனையில் நகைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த குறித்த நபர் மருந்து பொருட்கள் வாங்குவதற்காக வெளியில் சென்ற நிலையில் காணாமல் போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக  விசாரணைகளை மேற்கொண்டு வந்த திருகோணமலை தலைமையக பொலிஸார் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நபரை நேற்றிரவு ஹதுமுல்ல பகுதியில் வைத்து கைது செய்தனர்.

ஏல விற்பனைக்கு குறித்த நபரும் அவருடைய நண்பரும் வந்திருந்த நிலையில் அவர்   50 ஆயிரம் ரூபா  மாத்திரமே வைத்திருந்ததாகவும்இ ஏலத்தின்போது  வைத்திருந்த தொகையிலும் அதிகதொகைக்கு ஏலத்தினை நிறைவு செய்ததால் எஞ்சிய தொகையை வங்கியிடம் செலுத்தாது குறித்த நபர் மாயமாகியுள்ளார் 

அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகங்களை வெளியிட்ட நிலையில் அவருடைய தொலைபேசியை வைத்து புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி திருகோணமலையில் இருந்து பேரூந்தில் யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து வவுனியா சென்று பின் பலாங்கொடை நோக்கி செல்லும் வழியில் குறித்த நபர் ஹந்தும் முல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 5 குற்றச்சாட்டின் பேரில் இன்று திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த திருகோணமலையை சேர்ந்த முன்று வர்த்தகர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சாணக்கியன்

சாணக்கியன்

No comments:

Post a Comment

Powered by Blogger.