Breaking News
recent

கலைந்து போகும் கனவுகள்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகள் அஸ்தமனத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

இதனால் மன வேதனையில் இருக்கும் மஹிந்த, ராஜபக்ச ரெஜிமென்டிலிருந்து அடுத்த அரசியல் சக்தியை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

நீண்டகால அரசியலை இலக்கு வைத்து இளம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்கால ஜனாதிபதியாக்குவது மஹிந்தவின் திட்டமாகும்.

அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி அதன் ஊடாக நாமல் ராஜபக்சவை கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் எவன்கார்ட் வழக்கின் மூலம் கோத்தபாய குற்றவாளியாகுவதன் ஊடாக மஹிந்தவின் கனவு கலைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் நாட்களில் மிக் விமான கொள்வனவு செய்தமை தொடர்பிலான மோசடியில் கோத்தபாயவுக்கு எதிராக மேலுமொரு வழக்கு இடம்பெறவுள்ளது.

இந்த இரண்டு வழக்குகளும் திறந்து மூடும் வழக்காகும். open and Shut case என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் கோத்தபாய நிச்சியமாக சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும். அவ்வாறு சிறை சென்றால் கோத்தபாயவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

மூன்று வருடங்களுக்கு அதிமாக அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவரது சிவில் உரிமை ஏழு வருடங்களுக்கு இரத்து செய்யப்படும். அவ்வாறே கோத்தபாயவின் ஜனாதிபதி கனவும் கலைந்துவிடும்.

தற்போது நாமலின் எதிர்கால அரசியல் நடவடிக்கையும் கேள்விக் குறியாகியுள்ளது. நாமலின் வழக்குகளை பார்க்கும் போது அவர் தனது எதிர்காலம் முழுவதும் சிறைச்சாலையில் கழிக்க நேரிடும். சமகால காலத்தில் நாமல் இரு தடவைகள் சிறைச்சாலை சென்று வந்துள்ளார்.

அரச தலைவராகவும், தந்தையாகவும் தனது பிள்ளைகளையும் கட்டுபடுத்தாத தண்டனையை மஹிந்த அனுபவிக்க நேரிட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
a
சாணக்கியன்

சாணக்கியன்

No comments:

Post a Comment

Powered by Blogger.